இலங்கைக்கு தெற்கில் சர்வதேச கடலில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலில் பெருந்தொகையான போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகுடன் 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமைய கடற்படையினர் இந்த விசேட தேடுதலை நடத்தியதுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களான வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு மீன்பிடி படகு இலங்கை கடற்படையின் சிதுரல கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக கடற்படையினர் கூறியுள்ளனர்.