ஹம்பாந்தோட்டை மாநகர முதல்வர் எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, பம்பலபிட்டியில் அண்மையில் தனியார் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டதாக காவல்துறையில் முறையிடப்பட்டிருந்தது.