ஐக்கிய நாடுகள் சபையின் 76 பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்கா சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார்.
ஜனாதிபதி நேற்று பிற்பகல் 2.30 அளவில் நியூயோர்க் ஜோன் எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான மாநாடு நாளை ஆரம்பமாகவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் 21 ஆம் திகதி செவ்வாய் கிழமை பொதுச் சபைக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை கோவிட் -19 வைரஸ் தொனிப்பொருளில் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறுகிறது. எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி சில அரச தலைவர்களை சந்தித்து இருத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறும் உணவு மாநாடு மற்றும் 24 ஆம் திகதி நடைபெறும் எரிசக்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் ஜனாதிபதி தனது கருத்துக்களை முன்வைக்க எதிர்பார்த்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க,வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அத்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோர் ஜனாதிபதியுடன் நியூயோர்க் சென்றுள்ளனர்.