கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘மகான்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மகான்’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘மகான்’ படத்தில் இடம்பெறும் ‘சூறையாட்டம்’ என்கிற பாடல் வருகிற செப்டம்பர் 22-ந் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். மகான் படக்குழு வெளியிட்டுள்ள இந்த திடீர் அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Related Tags :