தமிழகத்தில் பிரபலமான தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்தான் டிடி திவ்யதர்ஷினி.
மேலும் இவருக்குச் சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை விகடன் வழங்கியுள்ளது.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று அதன் பின் குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பிரபலமாகி வருபவர்தான் சிவாங்கி. இவருடைய கொஞ்சல் பேச்சுனாலும், குழந்தை தனத்தினாலும் சிவாங்கியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டு ரசிப்பதுண்டு.
இந்நிலையில் தற்போது இவரைத் தேடி படவாய்ப்புகளும் வர தொடங்கியுள்ளது. அத்துடன் சிவாங்கிக்கு தொகுப்பாளராக வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேற உள்ளது.