வெலிகம பிரதேச சபை வரகாபிட்டிய தகனசாலையின் பெயர்க்கல்லில் 51 அரச தரப்பு அரசியல்வாதிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளமை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்பட 51 அரச தரப்பினரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் திகதி அது திறந்து வைக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.