மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு ஒன்றை ஃபைசர் தடுப்பூசி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
தமது 2/3 சோதனையில் ஃபைசர் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் 5 முதல் 11 அகவை வரையிலான சிறுவர்களில் “வலுவான” பிறப்பொருள் எதிரியை உருவாக்குகிறது என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஃபைசர் கொரோனா தடுப்பூசி தொடர்பில் 5-11 அகவைப்பிரிவினருக்காக வெளியிடப்பட்ட முதல் முடிவாக இது அமைந்துள்ளது. இவை இன்னும் தரவு மதிப்பாய்வு செய்யப்படவில்லை.
இந்தநிலையில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் விரைவில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தரவு சமர்ப்பிக்கப்பட்டவுடன் சில வாரங்களில் இளையோருக்கான தடுப்பூசியை நிறுவனம் அங்கீகரிக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பான சோதனையில் 5 முதல் 11 அகவைக்குட்பட்ட 2,268 பேர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு 21 நாட்கள் இடைவெளியில் தடுப்பூசியின் இரண்டு அளவுகள் பயன்படுத்தபட்டன. இந்த சோதனையில் 10-மைக்ரோகிராம் அளவு பயன்படுத்தபட்டதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.