கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக அண்மையில் மின்னஞ்சல் ஒன்று வெளியானது.
விமான நிலைய அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த போலியான மின்னஞசல் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் இராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜரின் மின்னஞ்சலுக்குள் அனுமதியின்றி நுழைந்து அந்த போலி மின்னஞ்சல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த மின்னஞ்சலில் கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் குண்டு வெடிக்கவுள்ளதாக குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போலியான மின்னஞ்சல் எச்சரிக்கையை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் மத்தல விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது