இலங்கையில் கையிருப்பிலுள்ள டொலர் பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் எரிவாயு விநியோகத்தை கடுமையாக பாதித்துள்ளதென இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டொலர் பற்றாக்குறை இறக்குமதி நடவடிக்கைகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உலகச் சந்தையில் எரிவாயு விலையுடன், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமையானது இலங்கையில் எரிவாயு பற்றாக்குறைக்கு காரணம் என லாப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியின் பின்னர் இந்த நிலைமை முடிவுக்கு வரும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு வழங்கப்பட்ட பொருட்களுக்கான கொடுப்பனவுகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால், வழங்குனர்கள் மீண்டும் விநியோகங்களை வழங்குவதில் தயக்கம் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன..