இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புள்ளி விபரங்களின் படி, ஒரு மாதத்துக்கு பின்னர் நேற்று நாட்டில் மிக குறைந்த எண்ணிக்கையிலான பிசிஆர் மற்றும் விரைவான அன்டிஜன் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
2021, ஆகஸ்ட் 21க்கு பின்னர் நேற்று நோயாளிகளைக் கண்டறிய 8,338 பிசிஆர் சோதனைகள் மற்றும் 2,181 விரைவு அன்டிஜன் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 21 அன்று நாட்டில் செய்யப்பட்ட 19, 963 பி சீ ஆர் மற்றும் 5473 அன்டிஜன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதேவேளை இலங்கையில் நேற்று 1,518 கோவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இது கடந்த சில வாரங்களுக்குப் பிறகு மிகக் குறைவான தொற்று எண்ணிக்கையாகும். அத்துடன் நேற்று 93 கோவிட் இறப்புகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.