சுவிஸ் பாராளுமன்றம் தேசிய உறுப்பு தான முறையை சீர்திருத்த ஒப்புதல் அளித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில், கடந்த 2019-ஆம் ஆண்டு “உடல் உறுப்பு தானம் – உயிர்களைக் காப்பாற்றுதல்” என்ற பெயரில் புதிய முயற்சி எடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், உறுப்பு தானம் தற்போது வெளிப்படையான ஒப்புதல் மாதிரியால் நிர்வகிக்கப்படுகிறது. அதாவது, உயிருடன் இருக்கும்போது ஒப்புதல் அளித்தவர்கள் நன்கொடையாளர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் இறந்த பிறகு அவரது குடும்பத்தினரிடம் தங்கள் கருத்தை முறையாகக் கேட்டு உடலுறுப்புகள் எடுக்கப்படுகின்றன.
ஆனால், இந்த முயற்சி வெற்றிகரமாக அமையவில்லை. தொடர்ந்து சுவிட்சர்லாந்தில், உறுப்புகளுக்கான தேவை, விநியோகத்தை விட அதிகமாக உள்ளது.
இந்நிலையில், சுவிஸ் பாராளுமன்றம் தேசிய உறுப்பு தான முறையை சீர்திருத்த ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து விரைவில் நாடு தழுவிய வாக்கெடுப்புக்கு அரசு செல்ல உள்ளது.
இதன்மூலம், சாத்தியமான உறுப்பு தானம் செய்பவரின் வெளிப்படையான ஒப்புதல் கொள்கையை மாற்றியமைத்து, அனுமானக் கொள்கையை அறிமுகப்படுத்த அரசியலமைப்பைத் திருத்துவதற்கு இந்த முயற்சி முயல்கிறது.
அதாவது, ஒருவர் தனது வாழ்நாளில் உடலுறுப்புகளை தானம் செய்ய ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால், இறந்த நபரிடமிருந்து உறுப்புகள் அகற்றப்படலாம் என்பது தான் இந்த புதிய முயற்சி.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அனுமான மாதிரியைப் பயன்படுத்துகின்றன.
பாராளுமன்றத்தின் இந்த புதிய முயற்சியை வரவேற்றுள்ள, சுவிற்சர்லாந்தின் உடல் உறுப்பு தானம் மற்றும் மாற்றுக்கான தேசிய அறக்கட்டளையான சுவிஸ்ட்ரான்ஸ்ப்லாண்ட் (Swisstransplant) இது தொடர்பாக கூறுகையில்:
சுவிட்சர்லாந்தில், உறுப்புகளுக்கான தேவை விநியோகத்தை விட அதிகமாக உள்ளது. ஒவ்வொரு வாரமும், சராசரியாக இரண்டு பேர் சரியான நேரத்தில் ஒரு உறுப்பைப் பெறாததால் இறக்கின்றனர்.
உடலுறுப்பு உறுப்பு நன்கொடையாளர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 150 பேர் என உயர்ந்து வருகிறது. ஆனால் தேவையை விட குருவாக உள்ளது.
தற்போதையை நிலையில், கிட்டத்தட்ட 1,500 பேர் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள் – இது பத்து ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. இவ்வாறு சுவிஸ்ட்ரான்ஸ்ப்லாண்ட் கூறியுள்ளது.