தென்னாப்பிரிக்காவில் 63 ஆப்பிரிக்க பென்குயின்களை விஷத் தேனீக்கள் தாக்கிக் கொன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏறப்டுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் (Cape Town) நகரில் இந்த அரிய இயற்கை நிகழ்வு நடந்துள்ளது.
உயிரிழந்த பென்குயின்கள் எண்ணிக்கையில் குறைந்துவரும் அரியவகை உயிரினத்தைச் சேர்ந்தவை என்றும், அவை பாதுகாக்கப்பட்டவை என்றும் தென்னாப்பிரிக்காவின் கடலோர பறவைகளின் காப்பகம் கூறியது.
பென்குயின்களின் கண்களைச் சுற்றி தேனீக்கடி அடையாளம் இருந்தது சோதனையில் தெரிய வந்ததாகக் கால்நடை மருத்துவர் டேவிட் ராபர்ட்ஸ் (David Roberts) குறிப்பிட்டார்.
இதுபோன்ற அசம்பாவிதம் மிக அரியது. அவ்வாறு அடிக்கடி நடந்ததில்லை என்றும் அவர் சொன்னார்.
சம்பவ இடத்தில் தேனீக்களும் இறந்து கிடந்தன. அனைத்துப் பென்குயின்களிலும் பல தேனீக்கடிகள் இருந்ததாகப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.