இலங்கையின் வானிலையில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மத்திய மலைகளின் மேற்கு சரிவு, வடக்கு, வட-மத்திய, வடமேற்கு, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில், காற்றின் வேகம் சில நேரங்களில் 40-50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம் என்றும் வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.