யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கோம்பயன் மணல் மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்படும் சடலங்களுக்கான கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு இன்று (28) மாநகர சபையின் மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது .
இதன்போது எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மின் தகன கட்டணத்தில் மாற்றம் செய்வதற்கு சபை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி 12 வயதுக்குக் குறைந்த கொரோனாத் தொற்றாளர்களின் சடலங்களுக்கு 4 ஆயிரம் ரூபாவும், ஏனைய கொரோனாத் தொற்றாளர்களின் சடலங்களுக்கு 8 ஆயிரம் ரூபாவும் தகனம் செய்வதற்கு அறவிடப்படவுள்ளது எனத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கொரோனாத் தொற்று அல்லாத சடலங்களுக்கு 15 ஆயிரம் ரூபா அறவிடப்படவுள்ளது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.