சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள சேதனப் பசளையில் ஆபத்தான பக்றீரியா காணப்படுவதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா (Dr.ajantha de silva) தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பசளை ஏற்றுமதியளாரிடமிருந்து பசளைகளை நாட்டுக்கு இறக்குமதி செய்யக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீன நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதனப் பசளையில் ஆபத்தினை ஏற்படுத்தக் கூடிய பக்ரீயாக்கள் இருப்பது பரிசோதனைகள் மூலம் உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Qingdao Seawin Biotech Group Co., Ltd என்ற சீன நிறுவனத்திடமிருந்து இந்த சேதன பசளைகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக அதிகாரபூர்வமற்ற வகையில் இந்த நிறுவனத்திடமிருந்து தருவிக்கப்பட்ட சேதனப் பசளைகளிலும் ஆபத்தான கிருமிகள் காணப்பட்டமை கண்டறியப்பட்டிருந்தது.
இவ்வாறான சேதனப் பசளை வகைகளை அரசாங்கம் தருவிக்கக் கூடாது என விவசாய பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.