ஆப்கானிஸ்தானில் மன்னர் காலத்து அரசியலமைப்பை பயன்படுத்தப்போவதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து கடந்த மாதம் 15-ந் திகதி தலீபான்கள் நாட்டை முழுமையாக தங்கள் வசமாக்கினர்.
அதனை தொடர்ந்து ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை அகற்றிவிட்டு புதிய இடைக்கால அரசை தலீபான்கள் அறிவித்தனர். அத்துடன் முற்றிலும் ஆண்களை மட்டுமே கொண்ட அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் மன்னர் காலத்து அரசியலமைப்பை பயன்படுத்தப்போவதாக தலீபான் நீதித்துறை மந்திரி அப்துல் ஹக்கீம் ஷாரி அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை ஆண்ட கடைசி மன்னரான முகமது ஜாஹிர் ஷாவின் காலத்தில் அமுலில் இருந்த அரசியலமைப்பை ஆப்கானிஸ்தான் இனி பயன்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
மன்னர் முகமது ஜாஹிர் ஷா 1933 முதல் 1973 வரை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது