லண்டனில் உள்ள சில எரிபொருள் நிலையங்களில் ஒரு லீற்றர் பெற்றோல் £2பவுண்டுகள் என விலையை உயர்த்தி உள்ளது.
இந்த திடீர் விலை அதிகரிப்பை என்ன செய்வது என்று தெரியாத பொது மக்கள், விலை கூடினாலும் பரவாயில்லை என்று, லீற்றருக்கு 2 பவுண்டுகள் கொடுத்து பெற்றோல் அடித்து செல்கின்றனர்.
லண்டனில் கடந்த ஆண்டு இதே மாதம் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்த கால கட்டத்தில் பெரும் பணத்திற்கு டாயிலட் டிசூவை கடை உரிமையாளர்கள் விற்றார்கள்.
இந்த வருடம் பெற்றோலை வைத்து அதிக விலைக்கு வியாபாரம் செய்ய எரிபொருள் நிலையங்கள் முடிவு செய்துள்ளனர்.
விழிப்புணர்வு குழுவினர் மக்களிடம் இதுபோன்ற நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றனர்.



















