நடிகை சமந்தா, திருமணத்திற்கு பிறகும் நல்ல கதையுள்ள படங்களாக நடித்து ஹிட் நாயகியாக வலம் வருகிறார்.
படத்தில் நடிப்பதை தாண்டி சொந்தமாக நிறைய தொழிலும் செய்து வருகிறார், அந்த விஷயங்கள் அனைத்துமே நமக்கு தெரியும். கடந்த சில மாதங்களாகவே சமந்தா-நாக சைத்தன்யா விவாகரத்து செய்கிறார்கள் என வதந்தி பரவி வருகிறது.
ஆனால் பிரபலங்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை. அதேபோல் சமந்தா ஹைதராபாத் வீட்டைவிட்டு மும்பையில் புதிய வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டதாகவும் ஒரு செய்தி.
இதுகுறித்து லைவ்வாக ரசிகர்களிடம் பேசிய சமந்தாவிடம் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு நடிகை, எப்படி இது போன்ற வதந்திகள் ஆரம்பித்தது என்று தெரியவில்லை, இதுபோன்ற 100 வதந்திகள் இருக்கிறது.
ஆனால், எதுவும் உண்மை இல்லை, ஐதராபாத் தான் ஒவ்வொன்றையும் எனக்கு வழங்கியது. நான் இங்கேயே தான் வசிப்பேன் என்று கூறியிருக்கிறார்.




















