அவுஸ்திரேலியாவில் இரண்டு மாதங்கள் ஊரடங்கு அமலில் இருந்தபோதும் கொரோனா பரவலானது கட்டுக்குள் இல்லாமல் தொடர்ந்து பரவிய வண்ணமே உள்ளது.
இது குறித்து வெளியான தகவலானது, அவுஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாதமாக ஊரடங்கு அமலில் இருந்தது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் மெல்போன் மாகாணத்தில் 900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்டா வைரஸ் காரணமாகவே மெல்போர்ன், விக்டோரியா போன்ற பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்’ என்று செய்தி வெளியானது.
அதுமட்டுமின்றி நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும். அதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மட்டும் அவுஸ்திரேலியாவில் கொரோனாவால் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 1290 பேர் பலியாகியும் உள்ளனர்.