காலையில் ஆரோக்கியம் நிறைந்த உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கீரை, கேழ்வரகு சேர்த்து ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1 கப்
ராகி மாவு – கால் கப்
கீரை – அரை கட்டு
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
வெங்காயம் – 1
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை
கீரை, வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலைமாவு, ராகி மாவு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலக்குங்கள்.
நறுக்கியவற்றை மாவில் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு ஆம்லெட்டாக ஊற்றி சிறு தீயில் வேகவிட்டு திருப்பி போட்டு எடுத்து சட்னி சாம்பாருடன் பரிமாறவும்.