கனடாவில் இடம்பெற்ற சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்ற 14 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து கனடாவின் Grande Prairie நகரம் அருகே இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் வேறு எந்தவொரு வாகனமும் உடன் சிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், சிறுமியின் பெயர், விபரங்களை வெளியிட முடியாதெனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.