சுவிஸில் பொது இடங்களில் பிரவேசிக்க விரும்புபவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பற்றிய முக்கிய விபரங்களை அறிந்துகொள்ள வேண்டியது அவசியானது.
சுவிஸில் கொரோனா தொற்று பரவல் தற்போது கணிசமாக குறைந்துவந்தாலும் பல பொது இடங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தற்பொழுது கொரோனா தடுப்பூசி சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது காட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மருந்துவ நிறுவனத்தினால் ஆங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்கள் சுவிஸ் தடுப்பூசி சான்றிதழைப் பெற்றுக்கொள்ள் விண்ணப்பம் செய்ய முடியும் என இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மருந்து நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்:
அவை பைசர், மொடர்னா, அஸ்ட்ரா சென்கா ஜான்ஸ்ஸான் தடுப்பூசிகளே ஆகும். ஜான்ஸ்ஸான் தடுப்பூசிகளை தவிர மற்ற மூன்று வகையான தடுப்பூசிகளிலும் இரண்டு மாத்திரைகளை ஏற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
சுவிஸ் கொரோனா சான்றிதழில் ஏற்றுக்கொள்ளப்படாத தடுப்பூசிகள்?
சினோபாரம் தடுப்புசி, ஸ்புட்னிக் தடுப்பூசி, மற்றும் சினோவெக் தடுப்பூசிகள் சுவிஸ் கொரோனா சான்றிதழில் ஏற்றுக்கொள்ளப்படாத தடுப்பூசிகள் ஆகும்.
சுவிஸில் பிரவேசிக்கச் சான்றிதழ் வேண்டுமா?
இல்லை. ஸ்புட்னிக், சினோபார்ம் மற்றும் சினோவெக் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் சுவிஸில் பிரவேசிக்க முடியும்.
வெளிநாட்டு கொரோனா சான்றிதழை சுவிஸ் சான்றிதழாக மாற்ற முடியுமா?
அமெரிக்கா போன்ற மூன்றாவது நாட்டின் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை உறுப்பு நாடுகளின் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
வெளிநாட்டிலிருந்து கொண்டு சுவிஸ் கொரோனா சான்றிதழ் எவ்வாறு பெறுவது?
சுவிஸிக்குள் பிரவேசிக்க முன்னரே சுவிஸ் கொரோனா சான்றிதழைப் பெற விண்ணப்பிக்கலாம். ஐரோப்பிய மருந்துவ நிறுவனம் (EMA) photo file, scan அல்லது PDF போன்ற முறைகளில் உங்கள் தகவல்களைப் பதிவேற்ற முடியும்.
எங்கு சுவிஸ் கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் பெற முடியும்?
அனைத்து கான்டன்களிலும் கொரோனா சான்றிதழ் வழங்கப்படுகின்றது. மத்திய அரசாங்கத்தின் இணைய தளத்தில் இந்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எவ்வாறு சுவிஸ் கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் பெற முடியும்?
சுவிஸ் கொரோனா தடுப்பூசியை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் அல்லது அலைபேசி செயலிகளின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக App StoreExternal link, Google Play StoreExternal link மூலம் பெறலாம்.
சுவிஸ் கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் பெற எவ்வளவு காலம் தேவைப்படும்?
சுவிஸ் கொரோனா தடுப்பூசி சான்றிதழை பெற சில நாட்களே தேவைப்படும். எவ்வாறெனினும் அதிகளவு விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றால் சில வாரங்களும் தேவைப்படலாம். சான்றிதழைப் பெற என்ன செய்ய வேண்டும்.