அநுராதபுரம் மற்றும் மின்னோரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல ATM இயந்திரங்களை உடைத்து பல லட்ச ரூபாய் பபினத்தைக் கொள்ளையடித்ததாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த சந்தேக நபரானவர் எப்பாவல பகுதியை சேர்ந்த சுமார் 30 வயது நபரென்று சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். மின்னோரிய பகுதியிலிருந்து ATM இயந்திரத்தை உடைத்து 76,24,000 ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதே சமயத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து சுமார் 29,80,000 ரூபா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை 24,90,000 மதிப்புள்ள சிறிய ரக லொறியொன்றும், 9,50,000 ரூபா மதிப்புள்ள மோட்டார் சைக்கிளும் 1,70,000 ரூபா மதிப்பிலான வீடு பொருட்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர் ATM இயந்திரத்தை உடைப்பதற்கு பயன்படுத்திய உபகரணம் மற்றும் இதர இயந்திரங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் இன்று அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.