கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 24 மணித்தியாலத்தில் 5,885 பேர் பாதிக்கப்பட்டதோடு 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் இதுவரையில் 16இலட்சத்து 38ஆயிரத்து 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 27ஆயிரத்து 991 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 44ஆயிரத்து 699 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 776 பேரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. கனடாவில் கொரோனா தொற்றிலிருந்து 15இலட்சத்து 65ஆயிரத்து 930 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.




















