ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் கல்வி அமைச்சகத்தால் வரலாற்றில் முதல் முறையாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான அதிகாரப்பூர்வ அடையாள அட்டை நேற்று வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) நிகழ்வொன்றில் மேலும் உரையாற்றுகையில்,
இந்த வகை அடையாள அட்டைகள் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு, இதுவரை அமைச்சகத்தால் வழங்கப்படவில்லை.
நல்லொழுக்கம் மற்றும் ஞானத்தின் சக்தி மட்டுமல்ல, ஆசிரியர்களின் அறிவும் குழந்தைகளை நல்ல குடிமக்களாக மாற்றுகின்றது.
எனவே ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும். ஆசிரியர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அவர்களின் உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.