அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் (Gotabaya Rajapaksa), எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும்(Sajith Premadasa) இடையே நேற்று தொலைபேசி வழி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திடீரென சஜித்திற்கு தொலைபேசி மூலம் அழைப்பு எடுத்துள்ள அரச தலைவர் கோட்டாபய, கரிமப் பசளை விவகாரம் பற்றிய பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
எனினும் இதுபற்றி கட்சியின் உயர்பீடத்துடன் பேச்சு நடத்தி மீண்டும் சந்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளதாக அரச தலைவரின் அலுவலக வட்டாரங்ளை மேற்கோள்காட்டிய, தகவல்கள் தெரிவிக்கின்றன