பிள்ளைகளை பயன்படுத்தி யாசகம் எடுக்கும் தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படும் என பெண்கள், சிறுவர் மேன்பாட்டு, முன்பள்ளி, ஆரம்ப கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி சேவைகள் ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த (Pial Nishantha) தெரிவித்துள்ளார்.
ரயில், பேருந்து போன்ற பொது இடங்களில் மாத்திரமல்லாது, நகரங்களுக்கு வாகன போக்குவரத்து நெரிசல் காணப்படும் இடங்களில் பிள்ளைகளை அழைத்து வந்து யாசகம் எடுப்பவர்கள் மற்றும் வீதியில் இருக்கும் பிள்ளை தொடர்பான நடவடிக்கை எடுக்க நீதியமைச்சுடன் இணைந்த கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்க உள்ளோம்.இதற்காக பொலிஸாரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
மிகவும் குறுகிய காலத்தில் நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் பியல் நிஷாந்த (Pial Nishantha) குறிப்பிட்டுள்ளார்.