கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையால் பால்மா விலை அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்டுப்பாட்டை விலை நீக்கப்பட்டதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை பாரிய அளவு அதிகரிக்கவுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 350 ரூபாவாலும், 400 கிராம் பக்கட் பால்மாவின் விலையை 140 ரூபாவாலும் அதிகரிக்க வேண்டும் என பால் மா இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.