7500 ரூபாய் கோவிட் – 19 கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் பல இடங்களில் வேலைநிறுத்த பேராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வேலைநிறுத்த பேராட்டம் இன்று (08) காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஐந்து மணி நேர வேலைநிறுத்தத்தை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
டிக்கோயா
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பணியாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் காரணமாக சிகிச்சைக்காக சென்றவர்கள் மற்றும் கிளினிக்காக சென்றவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
எனினும் அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் அவசர சேவைகள் வழமை போலவே இடம்பெற்றன.வைத்தியர்கள் மற்றும் மருந்து வழங்குனர்கள் ஒரு சில தாதியர்கள் சேவையில் ஈடுப்பட்டிருந்தமையும் காணக்கூடியதான இருந்தன.
மன்னார்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் தாதியர் சங்கத்தினர்,பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தில் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை
அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள் இன்று காலை தொடக்கம் பிற்பகல் வரையில் அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுத்ததுடன் கவன ஈர்ப்பு போராட்டத்தினையும் மேற்கொண்டனர்.
வைத்தியசாலைக்கு முன்பாக தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவன ஈர்ப்பு போராட்டத்தில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அம்பாறை
அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள் இன்று காலை தொடக்கம் பிற்பகல் வரையில் அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுத்ததுடன் கவன ஈர்ப்பு போராட்டத்தினையும் மேற்கொண்டனர்.
வைத்தியசாலைக்கு முன்பாக தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவன ஈர்ப்பு போராட்டத்தில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பருத்தித்துறை
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை சிற்றூளியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விசேட கொடுப்பனவான ஏழாயிரத்து ஐந்நூறு ரூபா கொடுப்பனவை தொடர்ந்து வழங்க கோரியும், சீருடை கொடுப்பனவை அதிகரித்து வழங்கக் கோரியும், காணப்படுகின்ற ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரியும், கொரோணா தொற்று ஏற்பட்ட ஊழியர்களின் விடுப்பு அதிகரிக்க கோரியும், மேலதிக நேர கொடுப்பனவை அதிகரிக்க கோரியுமே இப் போராட்டம் இடம் பெற்றது.
சுகாதார துறை உதவியாளர்கள் ஆரம்பித்துள்ள அடையாள நிறுத்தம் காரணமாக மலையக வைத்தியசாலைகளுக்கு கிளினிக் மற்றும், சிகிச்சைக்காக சென்ற பலர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.