இந்திய எல்லைக்குள் சீன இராணுவம் கடந்த வாரம் அத்துமீறி நுழைய முயன்றபோது மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது, அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய தவாங் பகுதியில் இந்த மோதல் சில மணி நேரங்கள் நீடித்ததாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில் இரு தரப்பிலும் எந்த சேதமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் பகுதி எல்லை பிரச்னைக்கு தீர்வு காண இந்திய- சீன உயர்நிலை பேச்சுவார்த்தைகளுக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இம் மோதல் நடந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த வாரம் சுமார் 200 சீன இராணுவம் இந்திய எல்லைக்கு மிக அருகில் இந்திய இராணுவத்தால் தடுத்து நிறுத்தியதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சில மணிநேரம் இரு நாட்டு இராணுவ வீரர்களும் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே குவிந்திருந்ததாகவும், பின்னர் இரு நாட்டு எல்லைப்பகுதி இராணுவ தளபதிகளின் சமரச முயற்சியின் பின்னர் இரு நாட்டு இராணுவவும் கலைந்து சென்றதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் இடம் பெற்ற சம்பவம் இவ்வாரமே இராணுவ வட்டாரங்களால் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.