கோயிலுக்கு சென்று விட்டு வருவதாக கூறிச் சென்ற, வவுனியா – தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவனை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த சிறுவனின் தந்தை வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று அதிகாலை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாட்டில் மேலும்,
வவுனியா – தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் மணிவண்ணன் சிவானுஜன் 17 வயதுடைய சிறுவன் நேற்று காலை அருகிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
எனினும் நேற்று இரவு வரையில் வீடு திரும்பவில்லை.
எனவே அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் இன்று அதிகாலை முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.