பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் அனைத்திற்க்கும் மிக பெரிய ரசிகர்கள் வட்டம் காணப்படுகிறது.
அந்த வகையில் இதில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களான சத்யா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல்கள் நிறுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஜீ தமிழ் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் “எதிர்பாராத காரணத்தினால் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி மற்றும் சத்யா ஆகிய இரண்டு தொடர்கள் வரும் வாரங்களில் இருந்து நிறுத்த உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த இரண்டு தொடர்களின் கடைசி அத்தியாயங்கள் அக்டோபர் 24, ஞாயிறு அன்று ஒளிபரப்பப்படும்” என அறிவித்துள்ளனர்.