அமெரிக்காவிற்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி உலக சுகாதார அமைப்பு அவசர பயன்பாட்டுக்காக அங்கீகரித்த எந்தவொரு கோவிட் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்கள் அமெரிக்காவிற்குள் வர அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயத்தை சீ.டீ.சீ என அழைக்கப்படும் அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில், ஃபைசர், மேடர்னா, ஜேன்சன், சினோபார்ம் மற்றும் சினோவேர்க் ஆகிய கோவிட் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.