அடுத்துவரும் வாரங்களில் சிறிலங்கா அரசியலில் பாரிய அதிர்வலைகள் ஏற்படப் போவதாக கூறப்படுகின்றது.
பண்டோரா ஆவணம் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சைகள் பல நாடுகளிலும் ஏற்படத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் சிறிலங்காவிலும் அந்தச் சர்ச்சை தொடர்கிறது.
இதனிடையே சிறிலங்காவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் எனப் பலரது பெயர்கள் அடங்கிய பண்டோரா ஆவணத்தின் இரண்டாவது பாகத்தின் வெளியீடு மிகவிரைவில் அம்பலமாகப் போவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னணி அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், முக்கியஸ்தர்கள் எனப் பலரது பெயர்கள் அதில் காணப்படுவதாக கூறப்படுகின்றது.