ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 20 ரூபாவால் அதிகரிக்குமாறு கோதுமை மா இறக்குமதியாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் பாண், பணிஸ் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போது ஒரு கிலோ கோதுமை மா 87 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
20 ரூபா விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படும்பட்சத்தில் ஒரு கிலோ கோதுமை மா 107 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.
இந்நிலையிலேயே கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில் பாண், பணிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையினை அதிகரிக்க வேண்டி ஏற்படும் என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.