வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த ஒருவர், கிளிநொச்சி பொது வைத்தியசாலை சத்திர சிகிச்சைக்காக காத்திருந்த போது, சத்திர சிகிச்சை கூட வாயிலிலேயே வாள்வெட்டு தாக்குதலிற்கு இலக்கானார். இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று இடம்பெற்றது.
வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த ஒருவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்காக, சத்திரசிகிச்சை கூடத்தில் காத்திருந்தார்.
அப்போது, வாள்களை மறைத்துக் கொண்டு 3 ரௌடிகள் வைத்தியசாலைக்குள் புகுந்து, சத்திரசிகிச்சைக்காக காத்திருந்தவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தினர்.
வாள்வெட்டிற்கு இலக்கானவர், சத்திரசிகிச்சைக்கூடத்திற்குள் தப்பியோடியதால் தப்பித்துக் கொண்டார்.
மார்பு, இரண்டு கைகளிலும் அவர் வாள்வெட்டு காயங்களிற்குள்ளாகியுள்ளார்.
ரௌடிக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது.
இது குறித்து கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


















