ஆப்பிரிக்காவின் காங்கோவில் ஆற்றில் படகுகள் கவிழ்ந்ததில் 160க்கும் அதிகமானோர் பலியானதாக அஞ்சப்படுகிறது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில், காங்கோ ஆற்றில் சென்று கொண்டிருந்தன. படகுகளில் 200-க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர்.
வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக படகுகள் கவிழ்ந்தன. இதில் படகுகளில் பயணம் செய்த 200-க்கும் அதிகமானோர் நீரில் முழ்கினர்.
தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 39 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் 61 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். 100-க்கும் அதிகமானோரின் நிலைமை தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நீரில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.