நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அல்ல பத்தில் ஒன்பது பலம் இருந்தாலும் உலக சந்தையில் அதிகரிக்கும் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Uthaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இருக்கும் பலத்திற்கு அமைய உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதில்லை.
உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதால் ஏற்படும் நஷ்டத்தை தொடர்ந்தும் அரசாங்கத்தினால் சுமக்க முடியாது.
எரிபொருளுக்கான அரசாங்கம் மானியம் வழங்கினால், இந்த மாதம், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும்.
இப்படியான நிலைமையில் விலையை அதிகரிக்காமல் நிறுவனத்தை கொண்டு நடத்த முடியாது எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.