கொழும்பு – ஹொரனை பிரதான வீதியில் பொரலஸ்கமுவ பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார். இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் காலை விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த செனுமி பெரேரா என்ற 20 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
கட்டடம் ஒன்றிற்காக பொருட்களை எடுத்து செல்லும் போது இவர்கள் இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை களுபோவில தெற்கு வைத்தியசாலையில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.