வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் நேற்று (11) மாலை இடம்பெற்ற கத்தி வெட்டுத் தாக்குதலில் 45 வயது குடும்பப்பெண்ணும் 16 வயதுடைய மகனும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இதுதொடர்பாக முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் சந்தேக நபரான 51வயதான அயல்வீட்டுக்காரரை கைது செய்துள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.