சுவிட்சர்லாந்தில் நேற்று முதல் இலவசமாக கோவிட் தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜேர்மனியும் இது தொடர்பிலான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜேர்மனியிலும் இனி இலவச கோவிட் பரிசோதனை அனைவருக்கும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் வாழ்வோர் இனி கோவிட் தொடர்பான அன்டிஜன் பரிசோதனையை செய்து கொள்ள கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்ற போதும் 12 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள், மருத்துவக் காரணங்களுக்காக தடுப்பூசி பெற்றுக் கொள்ள இயலாதவர்கள் ஆகியோருக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 12 முதல் 17 வயதுள்ளவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இலவச கோவிட் பரிசோதனை உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறையால் பிசிஆர் பரிசோதனை பரிந்துரைக்கப்படுபவர்களுக்கும் இலவச பரிசோதனை தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது.