நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் விபசார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட குடுபாடுவ பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த விபசார விடுதி ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
இதில் மூன்று பெண்கள் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 40,46 மற்றும் 21 வயது கொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.