மலேரியா ஒழிக்கப்படாத நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களின் இரத்த மாதிரிகள் கடந்த ஆண்டு முதல் சோதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
இதன் காரணமாக , இலங்கையில் மலேரியா பரவும் அபாயம் இருப்பதாக, தேசிய மலேரியா ஒழிப்பு பிரசார இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
இந்த ஆண்டின் 9 மாதங்களில் 15 மலேரியா நோயாளிகள் கண்டறியப்பட்டதாகவும், கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட 30 நோயாளிகளில், 10 பேர் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் மலேரியா நோய் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் இரத்தப் பரிசோதனை இல்லாமல் சமூகமயமாக்கப்பட்டால், தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு, அவர்களின் இரத்த மாதிரிகளை எடுக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டார்