மீகஹவத்த பகுதியில் பெண் ஒருவர் கைகுண்டுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீகஹவத்த,தொல்கொட பகுதியில் உள்ள வீட்டில் புதைக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டு கை குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டு அதில் தொடர்புடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீகஹவத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபரானவர் குண்டசாலை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பெண் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.