இலங்கையில் மாதம் 5353 ரூபாயில் ஒரு தனி நபர் வாழ முடியும் என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் மாத வருமானமாக 21,500 ரூபாய் சம்பாதித்தால், அவர்கள் வறுமையில் வாடாமல் வாழலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வறுமையில் வாடாமல் வாழத் மாதாந்தம் 5353 ரூபாய் போதும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. .