2015 திவிநெகும நிதி மோசடி வழக்கில் இருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ (Basil Rajapaksa) மற்றும் முன்னாள் திவிநெகும பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
ரூபா 36.5 மில்லியன் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி, கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, பஞ்சாங்கம் மற்றும் GI குழாய் விநியோகித்த வழக்கில் இருந்தே குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான ரூ. 2,292 மில்லியன் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் இருந்து பசில் உள்ளிட்ட நால்வர் முன்னதாக விடுதலை செய்யயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.