உயர்தர நைட்ரஜன் திரவ உரங்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்த மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்தார்.
நெல் அதிகளவில் பயிரிடப்படும் அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முதலில் இந்த நைட்ரஜன் திரவ உரங்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டத்திற்கு தேவையான மூன்று வகையான உரம், கரிம திரவ உரம் மற்றும் பொட்டாசியம் குளோரைட் ஆகியவை ஏற்கனவே அம்பாறை விவசாய மேம்பாட்டு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தில் பக்டீறியாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவை சீனாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டன.
இதையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள உர பிரச்சினையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்த இக்கட்டான நிலையிலேயே இந்தியாவிலிருந்து உரத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது