இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் சக கிரிக்கெட்டர் சாஹல் மீது சாதி ரீதியான வன்ம வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டின் காரணமாக தற்போது கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மூன்று மணிநேர விசாரணைக்குப் பின்பு, இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. பிரிவு 153 A மற்றும் பிரிவு 505-கீழ் யுவராஜ் சிங்கின் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில், ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறித்து பேசியதற்காக ஹரியானா போலீசாரால் யுவராஜ் சிங் மீது வழக்கு பதியப்பட்டது. ஐபிசி 153, 153(a), 505, 295 பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட அவர் மீது அப்பொழுதே வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.