கடந்த 10 நாட்களில் மட்டும் 12,158 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்லை தலைமை அலுவலகத்திலிருந்து கடவுச்சீட்டுக்களை பெற்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் சேவைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமார் 1,000 என்றபோதிலும் சமீபத்தில் அந்த எண்ணிக்கை 1,500 ஐ தாண்டியுள்ளது என்று அவர் கூறினார்.
கடந்த 10 நாட்களில் 11,000 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். மாத்தறை, கண்டி, வவுனியா மற்றும் குருநாகல் பிராந்திய அலுவலகங்களில் இருந்து 10,000 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 10 நாட்களில் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிததுள்ளார்.