தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.
பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் டெல்லியில் வரும் 25 ஆம் தேதி திரைப்பட விருது விழா நடைபெற உள்ளது. இதில் ரஜினிக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கவுள்ளனர்.